உரை மருந்து

உரை மருந்து

தேவையான பொருள்கள்:

சுக்கு 1 துண்டு

மாசக்காய் -1

ஜாதி காய் - 1

கடுக்காய்-1

கட்டி காயம்-1 துண்டு

சாரண வேர் - 1

 

செய்முறை

·      முதலில் ஒரு விளக்கில்  சிறுது விளக்கு எண்ணெய் விட்டு  தீபம் ஏற்றி, அதில் மேற்குறிய பொருட்களை  நன்று சுட்டு வைத்து கொள்ளவும்.

·      சிறு கல் ஒன்று (தட்டையான அம்மி போன்று) வாங்கி வைத்து கொள்ளவும். அதை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். குழந்தைக்கான மருத்துவ  பொருட்கள் உரைப்பதால் சுத்தம் செய்வதில்மிகுந்த கவனம் தேவை.

·      மேற்குறியபடி சுட்டு தயாராக வைத்துஉள்ள பொருட்களை, சிறுது தாய் பாலுடன்  உரைத்து, அதை சங்கில் ஊற்றி, புகட்ட வேண்டும்

மருந்தை எப்படி? யாருக்கு? கொடுப்பது சிறந்தது

·      பிறந்து 1 மாதமான குழந்தையிலிருந்து 5 மாதங்களான குழந்தைகள் வரை கொடுக்கலாம்.

·      ஆரம்பத்தில்  உரைமருந்தினை சங்கில் ஊற்றி, வாரம் ஒரு முறை மட்டும்  புகட்ட வேண்டும். சங்குதனை பயன்படுத்துவதில் போதிய அனுபவம் மிகவும் முக்கியம்.

·      ஆரம்பித்து இரண்டாவது வாரம் முதல், வாரம் இரு முறை கொடுக்கலாம். தொடர்ந்து படிப்படியாக மூன்று முறை வரை கூட்டி  செல்லலாம்.

·      வாரத்தில்  மூன்று முறை என்னை குளியல் கொடுக்கும் வழக்கமும் ஏற்படுத்திக்கொண்டால், எண்ணெய் குளியல் கொடுக்கும் அன்றே உரை மருந்தும் கொடுப்பது நலம்.

 

 

வசம்பு ஒரு அற்புத மருந்து

வசம்பு குழந்தைக்குளுக்கான ஒரு அற்புத வயிற்று வலி நிவாரண மருந்து. வசம்புவை லேசாக சுட்டு வைத்து கொள்ளவும். குழந்தை வயிற்று  வலியினால் அழுதால் (தொடர்ச்சியான அழுகை வயிற்று வலியின் அறிகுறி. மற்றும்  வயிறு மெதுவாக இல்லாமல் சற்று கனமாகவும் கல்லாகவும் இருக்கும் )  சுட வைத்த வசம்புவை அரை கல்லில்  சிறிது நீருடன் உரைத்து, தொப்புளை சுற்றி தடவி விடவும். சற்று பெரிய குழந்தைகளுக்கு லேசாக நாக்கிலும் தடவலாம். வசம்பு மிகவும் குளுமை ஏற்படுத்தும் என்பதால் நாக்கில் அதிகமாக தடவ கூடாது.

தொப்புள் மற்றும் வயிற்று பகுதியில் தடவுவதால் குழந்தைகள் வயிற்று வலியால் அழுவது குறையும்.

 

தொப்புள் கொடி பேணும் தமிழர் முறை

பொதுவாக குழந்தைகளின் தொப்புள் கொடி ஒரு வாரத்திற்குள் விழுந்து விடும். தொப்புள் கொடி தானாக விழும் வரை பொறுமையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.   அது விழும் பொழுது கவனமாக சேகரித்து கொள்ள வேண்டும்.

தங்கம் அல்லது வெள்ளியில் தாயத்து செய்து அதனுள் இந்த தொப்புள் கொடியை அடைத்து வைத்து கொள்ளவும்.

இந்த தாயத்தை நாய், சாவி ஆகியவற்றுடன்  ஒரு கருப்பு கயிற்றில் கோர்த்து குழந்தையின்  16வது நாளன்று  இடுப்பில் கட்டி விடுவது பழக்கம்.

தொப்புள் கொடியின் ஸ்டெம் செல்ஸ் பாதுகாப்பதற்காக  நவீன மருத்துவமனைகள் இன்று வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதுடன், தொப்புள் கொடி சேகரிப்பதை ஊக்கப்படுத்துகிறார்கள் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.


Comments

  1. what benefits do you expect out of this? or Is the practice more of relegiuos practice?

    ReplyDelete
    Replies
    1. This medicine helps in digestion and for good sleep. It is not a religious practice but this medicine is given to babies to overcome any discomfort in his/her body. -Poorani

      Delete

Post a Comment