Legiyam
This legiyam is taken by the mother for her digestion. The ingredients and method of making are given in tamil as it contains many tamil medicines.

|
செய்முறை
ஐட்டம் நம்பர்ஸ் 1 to 39 மருந்துகளை சுக்கு சேர்த்து காயா வைத்து,
பொடித்து (மருத்துவ பொருட்கள்
திரிக்கும் இடத்தில்) சலித்து வைத்து கொள்ளவும்.
|
இஞ்சி சாறு எடுத்து வடிகட்டி வைத்து கொள்ளவும் (அடியில் சேரும்
நஞ்சு நீங்கலாக)
|
கருப்பட்டியை தட்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி வைத்து கொள்ளவும்.
|
கருப்பட்டியை போன்று அச்சு வெல்ல பாகும் எடுத்து, வடிகட்டி வைத்து கொள்ளவும்.
|
பேரிச்சம் பழம், கிஸ்மிஸ், கொட்டை திராட்சை முதலியவற்ற்றை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து
கொள்ளவும். |
அடி கனமான (thick base)
பாத்திரத்தில் பொடியை கொட்டி, இஞ்சி கருப்பட்டி வெல்ல சாறுகளுடன் சேர்த்து
கட்டியாகாமல் கரைத்து கொள்ளவும்.
|
இந்த கரைசலை அடுப்பில் வைத்து, லேசாக சூடானவுடன் அரைத்து வைத்துள்ள
பேரிச்சம் பழம், கிஸ்மிஸ் &
திராட்சை கலவையை சேர்த்து கிளறவும் . |
அடி பிடிக்காமல் தொடர்ந்து
கிளறவேண்டும். கொதி நிலை வந்தவுடன் நல்லஎண்ணை சேர்த்து கிளறவும். |
சிறுது நேரம் கிளறிய பின் தேன் சேர்க்க வேண்டும்.
|
இறுதியாக நெய் ஊற்றி தொடந்து கிளற வேண்டும்.
|
தேவையான பதம் வருவதற்கு
கொதி வந்ததில் இருந்து சுமார் 3 மணி நேரம் கிளற வேண்டும்.
|
பாத்திரம் ஓரம் கொதி வரும்பொழுது தொட்டு (மிகுந்த கவனத்துடன்
கரண்டியில் எடுத்து கையாளவும்) பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க
வேண்டும்.
|
ஆறிய பின் கையில் எடுத்தால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். |
நன்கு ஆறிய பின் ஒரு பாத்திரத்தில் கைபடாமல் மரக்கரண்டியால்
எடுத்து வைத்து கொள்ளவும்.
|
1 ஆண்டு வரை நன்றாக இருக்கும். |
|
|
| | | |
|
This comment has been removed by the author.
ReplyDeleteVery accurate proportions& elaborate description on prep . Really useful Poorani- Subha
ReplyDeleteThankyou - Poorani
Delete